உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சூரமங்கலம் ஜெயதுர்கா பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை

சூரமங்கலம் ஜெயதுர்கா பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை

நெட்டப்பாக்கம் : சூரமங்கலம் ஜெயதுர்கா மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்துள்ளது. பள்ளியளவில் மாணவி தனுஷ்யா 583 மதிப்பெண்கள் பெற்று முதலிடம், மாணவர் உதயகுமார் 574 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம், மாணவி ஜனனி 561 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர். மாணவி தனுஷ்யா கம்பியூட்டர் அப்ளிகேஷன் பாடத்தில் சென்டம் எடுத்துள்ளார். பள்ளியில் 550 மதிப்பெண்களுக்கு மேல் 8 பேர், 500க்கு மேல் 28 பேர், 450க்கு 36 பேர் மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பள்ளி சேர்மன் மணி, பள்ளி நிர்வாகி மற்றும் முதல்வர் விஜயாமணி ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்தினர். பள்ளி நிர்வாகி கூறுகையில்,'இப்பள்ளி கிராமப்புற பள்ளியளவில் சாதனை படைத்து வருகிறது. மாணவர்களுக்கு கல்வியுடன், நீட், ஜிப்மர், ஐ.ஐ.டி., ஜே.இ.இ., வகுப்புகள் நடத்தப்படுகிறது. பள்ளியின் வெற்றிக்கு ஒத்துழைப்பு நல்கி வரும் பெற்றோர்,ஆசிரியர்கள், மாணவர்களு நன்றி' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ