உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நில அளவை, பதிவேடுகள் துறை ஆய்வுக்கூட்டம்

நில அளவை, பதிவேடுகள் துறை ஆய்வுக்கூட்டம்

புதுச்சேரி : புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்தில் நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை ஆய்வுக்கூட்டம் நடந்தது. புதுச்சேரியில் நில அளவீடு பணிக்கான தேவை கடந்த காலங்களைவிட தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. நில அளவையர் பற்றாக்குறை காரணமாக நில அளவீட்டு பணியை துரிதமாக செயல்படுத்த இயலவில்லை. இதனை துரிதப்படுத்த உரிமம் பெற்ற நில அளவையர் மற்றும் நில வரைவாளர்களை ஈடுபடுத்த விதிகள் உருவாக்கப்பட்டு, கடந்த 2020,ல் அரசாணை வெளியிடப்பட்டது. ஆனாலும், இதை முழுமையாக செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் குறைகளை சரி செய்வதற்கான கருத்து கேட்புக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் மனுக்களை பெறுதல், அனுப்புதல், கட்டணம் நிர்ணயித்தல், செயல்படுத்துவதற்கான காலக்கெடு, கணக்கெடுப்பு பணியின் குறுக்கு சோதனை, தணிக்கை போன்ற காரணிகளை கண்டறிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவட்ட துணை கலெக்டர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை