உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / டி-20 கிரிக்கெட் போட்டி துவக்கம் 

டி-20 கிரிக்கெட் போட்டி துவக்கம் 

புதுச்சேரி: பாண்டிச்சேரி கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் 57வது ஆண்டு டி-20 கிரிக்கெட் போட்டி துவக்க விழா மேட்டுப்பாளையம் என்.எஸ்.ஜே மைதானத்தில் 24ம் தேதி துவங்கியது. இப்போட்டிகளில் 36 அணிகள் கலந்து கொள்கின்றன. முதல் போட்டியில், பி.சி.ஏ., கோல்ஸ் மற்றும் பி.சி.ஏ. ஜூனியர்ஸ் அணிகள் மோதின. போட்டியை பாண்டிச்சேரி கிரிக்கெட் அசோசியேஷன் முன்னாள் செயலாளர் வேல்முருகன், செயலாளர் சிவக்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். அதில், பி.சி.ஏ., ஜூனியர் அணி வெற்றி பெற்றது. இப்போட்டிகளில் முதல் சுற்று லீக் முறையிலும், அடுத்த சுற்று நாக்-அவுட் முறையிலும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை