உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கால்நடை மருத்துவ கல்லுாரியில் டேபிள் டென்னிஸ் போட்டி துவங்கியது

கால்நடை மருத்துவ கல்லுாரியில் டேபிள் டென்னிஸ் போட்டி துவங்கியது

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்க ழக டேபிள் டென்னிஸ் போட்டி ராஜிவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிறுவனம் வளாகத்தில் நேற்று துவங்கியது. கல்லுாரி விளையாட்டுத் துறை இயக்குநர் முகமது அசிம் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் புல முதல்வர் முருகவேல் போட்டியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் புதுச்சேரி பல்கலைக்கழக பார்வையாளர் பிரகாஷ் சாந்து மற்றும் கல்லூரி அணிகளின் விளையாட்டுத்துறை இயக்குநர்கள் கலந்து கொண்டனர். டென்னிஸ் போட்டியில், பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் கல்லுாரியைச் சார்ந்த 12 கல்லுாரி மாணவியர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் தேர்வு பெறும் மா ணவர்கள் கீதம் யூனிவர்சிட்டி விசாகப்பட்டினத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடக்கும் போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஏற்பாடுகளை கால்நடை மருத்துவக் கல்லுாரி விளையாட்டுத் துறை இயக்குநர் முகமது அசிம் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை