உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தாகூர் கல்லுாரி பட்டமளிப்பு விழா

தாகூர் கல்லுாரி பட்டமளிப்பு விழா

சேலம்: சேலம் மாவட்டம், தேவியாக்குறிச்சியில் உள்ள தாகூர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் 14வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் ஜெய்கணேஷ் வரவேற்று, அறிக்கையை வாசித்தார். தாகூர் கல்வி நிறுவனத்தின் தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். எடுவேல்யூ கிரியேட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் செந்தில்குமார் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி, மாணவர்கள் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் வேலை வாய்ப்பு சிரமங்களையும், அதற்கு எவ்வாறு திறமைகளை மேம்படுத்தி கொள்ள வேண்டும். பட்டம் பெற்ற மாணவர்கள் பல இடங்களுக்கு சென்று அதன் அனுபவம் மற்றும் பல மொழிகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். பட்டம் பெற்ற மாணவர்கள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். விழாவில் நிறுவனத்தின் செயலாளர் மணிகண்டன், பொருளாளர் காளியண்ணன், கல்லுாரியின் துணைத் தலைவர்கள் காளியப்பன், ரவி, இணை செயலாளர்கள் வசந்தகுமார், அருண்குமார், ராமசாமி, விஜயகுமார் மற்றும் தாகூர் கல்வி குழுமத்தின் இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !