புதுச்சேரி தமிழ் சங்கத்தில் தமிழ்கூடல் நிகழ்ச்சி
புதுச்சேரி: மதுரை உலகத் தமிழ் சங்கம், சி.எஸ்.ஐ., பெண்கள் கலைக் கல்லுாரி இணைந்து 21வது, தமிழ்க்கூடல் நிகழ்ச்சியை புதுச்சேரியில் நடத்தின. புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் நடந்த விழாவில், உலகத் தமிழ்ச் சங்க துணைத் தலைவர் பர்வீன் சுல்தானா தலைமை தாங்கினார். உலகத் தமிழ்ச் சங்கத்தின் ஆய்வறிஞர் சோமசுந்தரி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். அரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் வளர்மதி, கவிஞர் 'வாணிதாசனின் படைப்பு வளம்' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து, பெண் கொடுமை, விதவை மறுமணம், பெண்ணுரிமை, பெண் கல்வி, பெண் விடுதலை போன்ற வாணிதாசனின் சிறப்புகளை பற்றி பேசினார். நிகழ்ச்சியில், வாணிதாசனின் குடும்ப உறுப்பினர்கள், தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், சி.எஸ்.ஐ., பெண்கள் கலைக் கல்லுாரி மாணவர்கள், உலகத் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள், தமிழ் ஆர்வலர்கள், கவிஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.