உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மணக்குள விநாயகர் கல்லுாரியில் தமிழ் வழக்குவாத போட்டி நிறைவு

மணக்குள விநாயகர் கல்லுாரியில் தமிழ் வழக்குவாத போட்டி நிறைவு

புதுச்சேரி: மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் சட்டக் கல்லுாரியில் தமிழ் மொழியில் வழக்கு வாதப்போட்டி மூன்று நாட்கள் நடைபெற்றது. போட்டியினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் முன்னாள் தலைவர் சந்திரமோகன் துவக்கி வைத்தார். இப்போட்டியில் சட்டப் பல்கலைக்கழகத்தில் இருந்து 2 அணிகள், தன்னிலைப் பெற்ற பல்கலைக் கழக்திலிருந்து 9 அணிகள், அரசு சட்ட கல்லுாரியில் இருந்து 16 அணிகள், தனியார் சட்டக் கல்லுாரியிலிருந்து 9 அணிகள் என 36 அணிகள் பங்கேற்றன.வழக்கு வாத இறுதிப்போட்டியில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் பதிவாளர் செல்வநாதன், சென்னை பல்கலைக்கழக சட்டத்துறையின் முன்னாள் தலைவர் டேவிட் ஆம்ரோஸ் நடுவர்களாக செயல்பட்டனர். போட்டியில் மதுரை அரசு சட்டக் கல்லுாரி முதலிடம், தர்மபுரி அரசு சட்டக்கல்லுாரி இரண்டாமிடம் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து நடந்த நிறைவு விழாவில், மணக்குள விநாயகர் கல்விக் குழுமத்தின் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். கல்லுாரி இயக்குனர் வெங்கடாசலபதி வரவேற்றார். மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தின் செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.சட்ட கல்லுாரி முதல்வர் வின்சென்ட் அற்புதம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை