உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தமிழ் இலக்கிய மன்றம் துவக்கம்

தமிழ் இலக்கிய மன்றம் துவக்கம்

பாகூர் : பாகூர் பாரதி அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழ் இலக்கிய மன்றம் திறப்பு விழா நடந்தது. பாகூர் பாரதி அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழ் துறை சார்பில், பாரதியாரின் 104ம் ஆண்டு நினைவு நாளையொட்டு, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, தமிழ் இலக்கிய மன்றம் திறப்பு விழா, நல்லாசிரியர் விருது பெற்ற கலவை கல்லுாரி அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் ஜெஸ்டின் ஆரோக்கியதாசிற்கு பாராட்டு விழா நடந்தது. பள்ளி துணை முதல்வர் சுதா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., தமிழ் இலக்கிய மன்றத்தை திறந்து வைத்து, தமிழ்த்துறை சார்பில் நடந்த பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். தமிழ் விரிவுரையாளர் அன்பரசன் வரவேற்றார். தமிழ் விரிவுரையாளர் ஜெயலட்சுமி நோக்க உரையாற்றினார். கணக்கு பதிவியல் விரிவுரையாளர் தனுசு வாழ்த்தி பேசினார். விரிவுரையாளர்கள் அகிலா, ரேவதி ஆகியோர் தொகுப்புரையாற்றினர். தலைமையாசிரியர் அமலி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ