உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தமிழக முதல்வர் பிறந்த நாள் நலத்திட்ட உதவி வழங்கல்

தமிழக முதல்வர் பிறந்த நாள் நலத்திட்ட உதவி வழங்கல்

அரியாங்குப்பம்: தமிழக முதல்வர் விஜய் பிறந்த நாளையொட்டி, மணவெளி தொகுதியில் ராமு எம்.எல்.ஏ., தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியையொட்டி, மணவெளி மாஞ்சாலை காளியம்மன் கோவில் மற்றும் மாரியம்மன் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் ராமு எம்.எல்.ஏ., கலந்து கொண்டு தரிசனம் செய்தார். தொடர்ந்து, தவளக்குப்பத்தில் எம்.எல்.ஏ., தலைமையில் கட்சியினர் கேக் வெட்டி கொண்டாடினர். தொடர்ந்து, சின்ன வீராம்பட்டினம், அபிேஷகப்பாக்கம், தவளக்குப்பம் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பள்ளி மாணவர்களுக்கு நோட், பேனா மற்றும், துாய்மை பணியார்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் எம்.எல்.ஏ., வழங்கினார். நிகழ்ச்சியில், மணவெளி தொகுதி த.வெ.க., நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ