உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரங்கசாமியை தமிழக முதல்வர் கடித்துவிட மாட்டார்; விமான நிலைய விரிவாக்க விவாதத்தில் லகலக

ரங்கசாமியை தமிழக முதல்வர் கடித்துவிட மாட்டார்; விமான நிலைய விரிவாக்க விவாதத்தில் லகலக

புதுச்சேரி : சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம் :அசோக்பாபு, ராமலிங்கம் (பா.ஜ.,): விமான நிலைய விரிவாக்க திட்டம் எந்த நிலையில் உள்ளது. அமைச்சர் லட்சுமிநாராயணன்: மாற்றியமைக்கப்பட்ட திசையில் ஓடுதள சீரமைப்பை உருவாக்கும் முன்மொழிவுக்கு இந்திய விமான நிலைய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. விமானத்தை பாதுகாப்பாக இயக்க ஏதுவாக காற்று வெளியை ஆய்வு செய்யும் பணியை ஆணையம் மேற்கொள்ள வேண்டும். புதுச்சேரி அரசு தொடர்ந்து தமிழக அரசு, மத்திய அரசிடம் வேண்டுகோள் வைத்து வருகிறது.அசோக்பாபு: விமான நிலைய விரிவாக்கம் இன்றியமையாதது. இதன்மூலம் தொழில் வளர்ச்சி ஏற்படும். முன்னுரிமை அளித்து திட்டத்தை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.வைத்தியநாதன் (காங்): விமான நிலைய விரிவாக்க திட்டத்துக்கு எவ்வளவு செலவாகிறது. அமைச்சர் லட்சுமிநாராயணன்: தமிழக பகுதியில் 216 ஏக்கர் நிலம் கேட்டுள்ளோம். உத்தேசமாக ரூ.450 கோடி வரை செலவாகும். நிலத்தை கையகப்படுத்தி தர வேண்டும் என நமது முதல்வர், தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். விழுப்புரம் கலெக்டர் நில ஆர்ஜிதம் தொடர்பாக வானுார் தாசில்தாருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தமிழக அரசும் பயன்பெறும் என்பதால், நிலத்தை இலவசமாக வழங்க முன்வர வேண்டும். கல்யாணசுந்தரம் (பா.ஜ): விமான நிலைய விரிவாக்கத்துக்கு ரூ.4 ஆயிரம் கோடி செலவாகும். சபையில் தவறான தகவலை அமைச்சர் சொல்ல வேண்டாம்.அமைச்சர் லட்சுமிநாராயணன்: நிலம் கையகப்படுத்த தேவைப்படும் நிதிக்கான உத்தேச மதிப்பை தான் சொல்லியுள்ளோம். நிலத்தின் ஜி.எல்.ஆர்., மதிப்பினை தமிழக அரசு நமக்கு அளிக்க வேண்டும். அதன் பிறகு பணிகள் துவங்கும்.கல்யாணசுந்தரம்: விமான நிலைய விரிவாக்கத்துக்கு புதுச்சேரி 185 ஏக்கரும், தமிழகத்தில் 216 ஏக்கர் நிலமும் எடுக்க வேண்டியுள்ளது. இந்த நிலத்தின் இன்றைய மார்க்கெட் மதிப்பு என்ன தெரியுமா. பட்ஜெட்டில் ரூ.20 கோடி மட்டும்தான் ஒதுக்கியுள்ளனர். அப்படி இருக்கும்போது எப்படி இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும்.அமைச்சர் லட்சுமிநாராயணன்: நிலத்தின் மதிப்பை தமிழக அரசுதான் முடிவு செய்ய வேண்டும். அதற்கு சில நடைமுறைகள் உள்ளன. அது முடிந்த பிறகு இழப்பீடு கொடுக்கப்படும்.எதிர்கட்சித்தலைவர் சிவா: புதுச்சேரி பகுதியில் விமான நிலையத்திற்கான அடிப்படை பணிகளையே முடிக்கவில்லை. புதுச்சேரி அரசுக்கு விமான விரிவாக்கம் செய்ய எண்ணம் உள்ளதா அல்லது இல்லையா.முதல்வர் ரங்கசாமி: விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது தான் புதுச்சேரி அரசின் எண்ணம். தமிழக முதல்வர் ஸ்டாலின் மனது வைத்தால்தான் இது நடைபெறும். எதிர்கட்சித் தலைவர் சிவா தமிழக முதல்வடன் பேசி நிலத்தை பெற்றுத்தர உறுதுணையாக இருக்க வேண்டும்.எதிர்கட்சித்தலைவர் சிவா: விமான நிலையம் வர வேண்டும் என்றால் நீங்கள் தான் தமிழக முதல்வரை நேரில் சந்திக்க வேண்டும். உங்களை தமிழக முதல்வர் கடித்துவிட மாட்டார். புதுச்சேரி வளர்ச்சிக்கும், விமான நிலைய விரிவாக்கத்துக்கும் ஒருபோதும் தமிழக முதல்வர் மறுத்து பேச மாட்டார். இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை