உள்ளூர் செய்திகள்

தர்ணாப் போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களின் கூட்டு போராட்டக்குழு சார்பில் ஊழியர்களுக்கு அரசே நேரடியாக சம்பளம், பென்ஷன், பணப் பலன்களை வழங்கக் கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். செயின்ட் தாழ் வீதியில் நடந்த தர்ணா போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் வேளாங்கண்ணிதாசன் தலைமை தாங்கினார். கலியபெருமாள், அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அசோகன், மூவேந்தன், முருகையன், ராஜேந்திரன், சேகர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பத்ரீஸ் தெலமாஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ