அரசு பள்ளியில் ஆசிரியர் தின விழா
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம், தவளக்குப்பம் அரசு பள்ளிகளில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. அரியாங்குப்பம் தந்தைபெரியார் அரசு பெண்கள் பள்ளியில், ஆசிரியர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், பள்ளி துணை முதல்வர் விஜயா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். அதே போல, தவளக்குப்பம் அரசு துவக்கப்பள்ளியில், ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட் டது. சிறப்பு விருந்தினராக, சபாநாயகர் செல்வம் கலந்து கொண்டு, பள்ளி மாணவர்களுக்கு சாக்லெட் வழங்கினார். வட்டம் 3, சார்பில், ஆய்வாளர் வாஞ்சியநாதன், தலைமை ஆசிரியர் சச்சிதானந்தம் உட்பட ஆசிரி யர்கள் கலந்து கொண்டனர்.