மேலும் செய்திகள்
ஒன்பது ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது
05-Sep-2025
புதுச்சேரி; கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது. மாணவி சிவசக்தி வரவேற்றார். தலைமை ஆசிரியர் நிலை-1 வாசு தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் நிலை-2 கணபதி முன்னிலை வகித்தார். விழாவில், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ரெக்ஸ் (எ) ராதாகிருஷ்ணன் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டார். தொடர்ந்து, அனைத்து ஆசிரியர்களும் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். பள்ளி மாணவிகள் ஹேமவர்த்தினி, கீர்த்தனா, கார்த்திகா, தாரணி ஆகியோர் ஆசிரியர்களை வாழ்த்தி பாடல் மற்றும் கவிதை வாசித்தனர். மாணவன் முகேஷ்வரன் நன்றி கூறினார். மாணவி மோனிகா தொகுத்து வழங்கினார்.
05-Sep-2025