உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வேனில் இரும்பு கம்பிகள் சரிந்ததால் பரபரப்பு

வேனில் இரும்பு கம்பிகள் சரிந்ததால் பரபரப்பு

புதுச்சேரி: டாடா ஏஸ் வேனில் எடுத்து வந்த இரும்பு கம்பிகள் சரிந்ததால் பரபரப்பு நிலவியது. கோரிமேடு, சாலை வழியாக இரும்பு கம்பிகள் ஏற்றிய டாடா ஏஸ் வேன் நேற்று மாலை 5:00 மணியளவில், தட்டாஞ்சாவடி நோக்கி சென்று கொண்டிருந்தது. ஜிப்மர் மருத்துவமனை அருகே சென்ற போது, சாலையில் இருந்த வேகத்தடையில் டாடா ஏஸ் வேன் ஏறியபோது, திடீரென இரும்பு கம்பிகள் சரிந்து விழுந்தன. முன்னால் சென்ற தனியார் பஸ் மீது கம்பிகள், விழாமல் பக்கவாட்டில், சரிந்தது. மற்ற வாகனங்கள் பின் தொடர்ந்து செல்லாமல் இருந்ததால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. சாலை நடுவே நின்ற வாகனத்தை போக்குவரத்து போலீசார் அப்புறப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ