மாடி தோட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
புதுச்சேரி: பாண்டிச்சேரி பிரெஞ்சு சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில், மாடித்தோட்டம் வைப்பது பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரி நேரு வீதி - காந்தி வீதி சந்திப்பில், வீட்டு மாடியில், மாடித்தோட்டம் அமைப்பது பற்றி பொதுமக்களை ஊக்குவித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. சங்க தலைவர் பரிமளம் தலைமை தாங்கினார். திட்டக்குழு தலைவர் தாமஸ் ஆரோக்கியராஜ், சங்க ஆளுநர் அருண் தீப்பாஞ்சான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மலர் செடிகளை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில், முன்னாள் தலைவர்கள் தேவராஜ், செந்தாமரைக்கண்ணன், உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், செயலாளர் பாபு, வழக்கறிஞர் யுவராஜ், சுபாஷ் உட்பட சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.