உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தட்டாஞ்சாவடி தொகுதி தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தட்டாஞ்சாவடி தொகுதி தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

புதுச்சேரி : தட்டாஞ்சாவடி தொகுதி தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாரி நகரில் நடந்தது. புதுச்சேரியில் இரண்டாம் கட்டமாக தி.மு.க., சார்பில் வரும் 15ம் தேதி தட்டாஞ்சாவடி உள்ளிட்ட 7 தொகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாமை ஜெகத்ரட்சகன், எம்.பி., துவக்கி வைக்க உள்ளார். இற்கான ஆலோசனை கூட்டம் தட்டாஞ்சாவடி தொகுதி காந்திநகர், வேலைவாய்ப்பு அலுவலகம் எதிரில் பாரி நகரில் நடந்தது. கூட்டத்திற்கு தட்டாஞ்சா வடி தொகுதி அவைத் தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார். தொகுதி பொறுப்பாளர் நித்திஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தி.மு.க., மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவர் சிவா கலந்து கொண்டு பேசியதாவது, தட்டாஞ்சாவடி தொகுதி பொறுப்பாளர் நித்திஷ்க்கு, தி.மு.க., நிர்வாகிகள் முது ஒத்துழைப்பு கொடுத்துள்ளீர்கள். 28 ஆண்டுகளாக புதுச்சேரியில் தி.மு.க., ஆட்சியில் இல்லை. ஆனாலும் இன்று வரை தி.மு.க., துவண்டு போக இல்லை. தொடர்ந்து நாம் பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம். 2026 ம் சட்டசபை தேர்த லில் புதுச்சேரி தி.மு.க., ஆட்சி உறுதியாக அமையும் என்றார். கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் இளம்பரிதி, அமைப்பாளர்கள் காயத்ரி, மதிமாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ