இறந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ரூ.10 லட்சம் நிதியுதவி
புதுச்சேரி: புதுச்சேரியில் எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு, முதல்வர் ரங்கசாமி நிதியுதவி வழங்கினார். அரியாங்குப்பம், சண்முகா நகர், வீரமணிகண்டன் விபத்தில் இறந்தார். அவரது குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ், ரூ.10 லட்சத்தை முதல்வர் ரங்கசாமி நேற்று முன்தினம் வழங்கினார். நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன்குமார், பாஸ்கர் எம்.எல்.ஏ., துறை இயக்குநர் இளங்கோவன் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.