உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு பூ கொடுத்து பாராட்டிய டி.ஐ.ஜி.,

ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு பூ கொடுத்து பாராட்டிய டி.ஐ.ஜி.,

புதுச்சேரி: ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம் இனிப்பு மற்றும் பூக்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.புதுச்சேரியில் வரும் 12ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து போக்குவரத்து போலீசார் பொதுமக்கள், பள்ளி கல்லுாரி மாணவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக, தட்டாஞ்சாவடி ராஜிவ் சிக்னலில் ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு பூ மற்றும் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு, டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி இனிப்பு மற்றும் பூக்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு, ஹெல்மெட் அவசியம் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ் கொடுத்து, அறிவுரை வழங்கினர். எஸ்.பி., செல்வம், இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்பாபு, கோலக்கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை