உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மாற்றுத்திறனாளி பெண் மாயம்

 மாற்றுத்திறனாளி பெண் மாயம்

புதுச்சேரி: மாற்றுத்திறனாளி பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருபுவனைபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி, 59; மாற்றுத்திறனாளி. இவர் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று மீண்டும் வீட்டிற்கு வந்துவிடுவார். கடந்த 22ம் தேதி இரவு 9:30 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இவரை உறவினர்கள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மகன் பரசுராமன் கொடுத்த புகாரின் பேரில், திருபுவனை போலீசார் வழக் குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி