மேலும் செய்திகள்
சென்னை மருத்துவ கல்லுாரிக்கு மத்திய அரசு விருது
21-Mar-2025
புதுச்சேரி: தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் 65 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீட்டாக பெற வேண்டும் என,மாணவர் பெற்றோர் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் தலைவர் பாலா வெளியிட்ட அறிக்கை:புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிந்த நிலையில், மருத்துவ படிப்பிற்கு நீட் நுழைவு தேர்வு வரும் 4ம் தேதி நடக்க உள்ளது. அதே போல், பொறியியல் படிப்பிற்கு, ஜெ.இ.இ., நுழைவு தேர்வு நடைபெற உள்ளது. அதையடுத்து, கல்வித்துறை, சுகாதாரத்துறை மற்றும் சென்டாக் அமைப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான சட்ட திட்ட வழிகாட்டி நெறிமுறைகளை தகவல் சிற்றேடு அமைத்திட வேண்டும்.இந்த கல்வியாண்டில், 3 தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் 650 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. மற்ற மாநிலத்தை பின்பற்றுவது போல, தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் 65 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீட்டாக பெற வேண்டும்.மேலும், 2024-25ம் கல்வியாண்டு எம்.பி.பி.எஸ்., என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டு இடங்களுக்கு போலி சான்றிதழ் சமர்ப்பித்த வழக்கை, புதுச்சேரி அரசு சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
21-Mar-2025