உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவர்களுடன் இணைந்து கடற்கரையை சுத்தம் செய்த கவர்னர்

மாணவர்களுடன் இணைந்து கடற்கரையை சுத்தம் செய்த கவர்னர்

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரையில், கவர்னர் கைலாஷ்நாதன் மாணவர்களுடன் இணைந்து துாய்மை பணியில் ஈடுபட்டார்.சமீபகாலங்களில் பிளாஸ்டிக் குப்பைகள், ஆறுகள் மற்றும் நீர் வழித்தடங்கள் வாயிலாக, கடற்கரை மற்றும் கடற்பகுதிக்குள் சென்று விடுகின்றன. இதனை தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் செப்., மாதத்தில் வரும் மூன்றாவது சனிக்கிழமை, சர்வதேச கடலோர துாய்மை தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, புதுச்சேரி மாநிலத்தில் சர்வதேச கடலோர துாய்மைப்படுத்தும் நிகழ்ச்சி, நேற்று காந்தி சிலை அருகில், ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிகழ்ச்சியை இந்திய கடலோர காவல்படை புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியின் கமாண்டர் டி.ஐ.ஜி., தஸிலா ஏற்பாடு செய்தார்.சிறப்பு விருந்தினராக, கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்று மாணவர்களுடன் துாய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், கல்யாண சுந்தரம், போலீஸ் ஐ.ஜி., அஜித்குமார் சிங்ளா கலந்து கொண்டனர்.மேலும், பள்ளி, கல்லுாரி, தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்டம், முன்னாள் ராணுவத்தினர், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிறைவாக அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை