வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அந்த கடைக்காரன் லைசென்சை கேன்சல்பண்ணணும்
புதுச்சேரி செஞ்சி சாலை மணக்குள விநாயகர் கோவில் அருகில் உள்ள பிரபல பழக்கடையில் கடந்த வாரம் இன்ஸ்பெக்டர் ஒருவர் அதிகாரிகளுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க ரூ. 350 மதிப்புள்ள பழக்கூடை (ப்ரூட் பொக்கே) 8 வாங்கினர். அதனை பிரித்து எடை போட்டபோது, ரூ. 200 மதிப்பிலான பழம் மட்டுமே இருந்தது. அதுபோல் சாதாரண பழம் வைத்து விட்டு, அதிக விலை என நிர்ணயித்து பில் போடப்பட்டு இருந்தது.அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர், பழக்கடைக்கு சென்று ஏன் இப்படி செய்தீர்கள் என விசாரித்தபோது, பேக்கிங் செய்த நபர் தவறான பில் எடுத்து விட்டார் என கெஞ்சினர்.போலீஸ் வாங்கும் பழத்திற்கே இப்படி ஏமாற்றினால், சாதாரண பொதுமக்களிடம் எவ்வளவு ஏமாற்றுவீர்கள் என கேள்வி எழுப்பினர். கடைசியாக பிரித்து எடை போடப்பட்ட 2 பழ கூடைக்கு மட்டும் பணம் செலுத்திவிட்டு, மீதமுள்ள 6 பழக்கூடைகளை அதே கடையில் திருப்பி கொடுத்து, பொதுமக்களை ஏமாற்றாமல் வியாபாரம் செய்யுங்கள் என, இன்ஸ்பெக்டர் அறிவுரை கூறிச் சென்றார்.
அந்த கடைக்காரன் லைசென்சை கேன்சல்பண்ணணும்