உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காங்., கையெழுத்து இயக்கம்

காங்., கையெழுத்து இயக்கம்

புதுச்சேரி : புதுச்சேரி காங்., சார்பில் வாக்கு மோசடி செய்து ஆட்சியில உள்ள பா.ஜ., ஆட்சியை தெரிந்து கொள்ளும் வகையில் கையெழுத்து இயக்கம் நேற்று முன்தினம் துவங்கியது. எதிர்க்கட்சி தலைவர் ராகுல் நாடு முழுதும் வாக்கு மோசடி குறித்தும், பா.ஜ., மோடி ஆட்சியை துாக்கி எறிய வாக்கு மோசடியின் ஆதாரங்களுடன் மக்களிடம் சென்று ஆதரவு திரட்டி வருகின்றார். இதன் தொடர்ச்சியாக வாக்கு மோசடி பற்றி மக்கள் தெரிந்து கொள்ளவும், இந்திய தேர்தல் ஆணையம் 5 கோரிக்கைகளை நிறைவேற்றவும் 5 கோடி கையெழுத்துகள் பெற அனைத்து மாநிலங்களிலும் வாக்குத் திருட்டு விழிப்புணர்வு பிரசார கையெழுத்து பெறும் பணியை துவக்கி உள்ளார். புதுச்சேரி காங்., சார்பில், மாநில முழுதும் வாக்குத் திருட்டு தொடர்பாக கண்டன ஊர்வலம் நடத்தப்பட்டது. அதன்படி, உருளையான்பேட்டை தொகுதி அண்ணாசாலை அருகே நேற்று முன்தினம் துவங்கிய நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, உருளையன்பேட்டை வட்டார காங்., தலைவர் ஆறுமுகம், மாநில பொதுச் செயலாளர்கள் ரகுமான், திருமுருகன், செயலாளர் பாபுலால், ராஜகுமார் முன்னாள் இளைஞர் காங்., செயல் தலைவர் வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ