உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வேலை வாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது

வேலை வாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது

புதுச்சேரி: இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம், நாளை நடக்கிறது.இதுகுறித்து, துணை பிராந்திய வேலை வாய்ப்பு அதிகாரி கோட்டூர்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம் மற்றும் நவயுகா கன்சல்டன்சி சேவை மையம் இணைந்து, வேலை வாய்ப்பு முகாமை நாளை நடத்துகின்றன.ரெட்டியார்பாளையம், கனரா வங்கி இரண்டாம் தளத்தில், காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும் முகாமில், 2 தனியார் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, தேர்வு செய்கின்றனர்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தை சேர்ந்த படித்த இளை ஞர்களும் கலந்து கொள்ளலாம். முகாமில் பங்கேற்ப வர்கள், கல்வி தகுதிக்கான அனைத்து, அசல் சான்றிதழ் களை எடுத்து வரவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ