உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கோர்ட்டில் மாயமான 35 சவரன் நகைகள் மீட்பு லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணையில் திடுக்

கோர்ட்டில் மாயமான 35 சவரன் நகைகள் மீட்பு லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணையில் திடுக்

காரைக்கால்: காரைக்கால் கோர்ட்டில், பாதுகாப்பு பெட்கத்தில் இருந்த மாயமான 35 சவரன் நகைகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.காரைக்கால் போலீசார், பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்த நகை உள்ளிட்ட பொருட்களை, வழக்கு விசாரணைக்காக அங்குள்ள நீதிமன்றங்களில் ஒப்படைத்து வருகின்றனர். இந்த நகைகள், மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தது. இந்த பாதுகாப்பு பெட்டகத்தை பாதுகாக்கும் பொறுப்பு வகித்த தலைமை சிரஸ்தார் குணசேகரன், 2 ஆண்டிற்கு முன் புதுச்சேரிக்கு மாறுதாலகி சென்றார். அப்போது அவர் பாதுகாப்பு பெட்டக சாவியை, கோர்ட்டில் ஒப்படைக்கவில்லை.இந்நிலையில் பாதுகாப்பு பெட்டக பாதுகாக்கும் பொறுப்புக்கு வந்த சுந்தரவடிவேல், பாதுகாப்பு பெட்டக சாவி இல்லாததால், பூட்டை உடைத்து பார்த்தபோது அதில் வைத்திருந்த நகைகள் மாயமாகி இருந்தது. இதுகுறித்த விசாரணைக்கு குணசேகரன் ஆஜராகவில்லை.இதுகுறித்து சுந்தரவடிவேல், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து கடந்த 18 ம் தேதி குணசேகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், இன்ஸ்பெக்டர் தனசேகரன், கோர்ட் அனுமதி பெற்று குணசேகரனை, 2 நாள் காவலில் எடுத்து விசாரித்தார். அதில், நீதிமன்ற பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திருந்த நகைகளை, புதுச்சேரி நெல்லித்தோப்பில் 2 அடகு கடைகளிலும், பாரதி வீதியில் உள்ள 3 அடகு கடைகளில் அடகு வைத்திருப்பதும், மற்ற நகைகளை வீட்டில் வைத்திருப்பது தெரிய வந்தது. .அதன்பேரில் ,5 அடகு கடைகளில் அடகு வைத்த நகைகள் மற்றும் அவரது வீட்டில் பதுக்கி வைத்திரந்த 35 சவரன் நகைகள், 66 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ஒரு வாட்ச் ஆகியவற்றை பறிமுதல் செய்து நேற்று முன்தினம் காரைக்கால் கோர்ட்டில் ஒப்படைத்தனர். மேலும், குணசேகரனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ