உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஏரி பாசன வாய்க்கால் துார் வரும் பணி

ஏரி பாசன வாய்க்கால் துார் வரும் பணி

அரியாங்குப்பம்: முருங்கப்பாக்கம் ஏரி பாசன வாய்க்கால் துார் வாரும் பணியை பாஸ்கர் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். அரியாங்குப்பம் தொகுதி, முருங்கப்பாக்கம் பகுதியில் உள்ள ஏரி பாசன வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டு மழை காலங்களில், மழைநீர் சுலபமாக செல்ல முடியாமல் நகர் பகுதியில் தேங்கி நிற்கிறது. அப்பகுதி மக்கள் ஏரி பாசன வாய்க்காலை துார் வார தொகுதி எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை வைத்தனர். அதையடுத்து, 3.15 லட்சம் ரூபாய் மதிப்பில், வாய்க்காலை துார்வார நிதி ஒதுக்கப்பட்டது.துார் வாரும் பணியை பாஸ்கர் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். பொதுப்பணித்துறை நீர் பாசன கோட்ட செயற் பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவிப்பொறியாளர் மதிவாணன், இளநிலை பொறியாளர் சங்கர் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி