உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அவசரகதியில் நடக்கிறது.... அலங்கார வாகனங்கள் செய்யும் பணி

 அவசரகதியில் நடக்கிறது.... அலங்கார வாகனங்கள் செய்யும் பணி

குடியரசு தின விழாவில் பங்கு பெறும் அலங்கார அணிவகுப்பு வாகனங்களை தயார் செய்யும் பணி அவசரகதியில் நடந்து வருகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் குடியரசு தின விழாவில் அரசு துறைகளின் சாதனைகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், அணிவகுப்பு வாகனங்கள் பங்குபெறும். இதில் சிறப்பன அணிவகுப்பு வாகனத்தை அமைத்த துறைக்கு பரிசு வழங்கப்படும். இந்நிலையில், இந்தாண்டிற்கான அணி வகுப்பு வாகனங்கள் தயார் செய்யும் பணிக்கான ஆணை குடியரசு தின விழாவிற்கு 5 நாட்கள் இருக்கும் நிலையில், நேற்று முன்தினம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனைதொடர்ந்து புதுச்சேரி பழைய துறைமுகம் உள்பட சில துறை அலுவலக வளாகங்களில் அலங்கார அணிவகுப்பு வாகனங்கள் தயார் செய்யும் பணி அவசரகதியில் நடந்து வருகிறது. உப்பளம் துறைமுகத்தில் ஆதிதிராவிடர், சுகாதாரம், கால்நடை பராமரிப்பு துறை, வேளாண் ஆகிய துறைகளின் அணிவகுப்பு வாகனங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி