மேலும் செய்திகள்
இன்று இனிதாக: உடுமலைபேட்டை
16-Feb-2026
புதுச்சேரி: புதுச்சேரி, கேண்டின் வீதியை சேர்ந்தவர் அபிேஷக்குமார், 33; சோலை நகர், கண்ணதாசன் வீதியில் வட்டிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 18ம் தேதி இவரது கடைக்கு வந்த சோலை நகரை சேர்ந்த சபரி, பாரதி ஆகியோர், குடிப்பதற்கு ரூ. 200 கேட்டு தொந்தரவு செய்தனர். இதனால், அபிேஷக்குமார் பணம் இல்லை எனக் கூறியபடி கடையில் இருந்து வெளியே சென்றார். மீண்டும் கடைக்கு வந்தபோது, இருவரும் இல்லை. உள்ளே சென்று பார்த்தபோது அலமாரியில் இருந்த 3 கிராம் தங்க கம்மல் திருடு போய் இருந்தது. அபிேஷக்குமார் புகாரின் பேரில், சபரி, பாரதி ஆகியோர் மீது முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
16-Feb-2026