உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தினமலர் அரிச்சுவடி ஆரம்பம் புதுச்சேரியில் இன்று நடக்கிறது

தினமலர் அரிச்சுவடி ஆரம்பம் புதுச்சேரியில் இன்று நடக்கிறது

புதுச்சேரி : 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம் இதழ்' மற்றும் கோர்காடு தி ஸ்காலர் பள்ளி, ஓம்சக்தி மாறன் இன்பரா புராஜெக்ட் இணைந்து நடத்தும், 'அரிச்சுவடி ஆரம்பம்' எனும் வித்யாரம்பம் நிகழ்ச்சி புதுச்சேரியில் இன்று நடக்கிறது.புதுச்சேரி மறைமலையடிகள் சாலை, வெங்கட சுப்பா ரெட்டியார் சிலை, லட்சுமி பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள என்.எஸ். போஸ் மகாலில் இன்று காலை 7.00 முதல் 9:30 மணி வரை நடக்க உள்ள நிகழ்ச்சியில், 2.5 மற்றும் 3.5 வயதுள்ள மழலைகளின் விரல் பிடித்து, பல்வேறு துறையை சார்ந்த தொழிலதிபர்கள் 'அ -ஆ' எழுதி பழக்க உள்ளனர்.இந்த நிகழ்ச்சியில் முன்பதிவு செய்துள்ள குழந்தைகள் மட்டுமே பங்கேற்க முடியும். இதில், பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும், 'ஸ்கூல் கிட்' பரிசாக வழங்கப்படும். விஜயதசமி திருநாள், கல்வி கற்கும் வித்யாரம்பத்துக்கு உகந்த நாள். இந்நாளில் உங்கள் வீட்டு இளந்தளிர்களின் பிஞ்சு விரல்களை பிடித்து அரிச்சுவடியை ஆரம்பித்து வைக்க பல்வேறு துறை தொழிலதிபர்கள் பங்கேற்கின்றனர். கல்வி கோவிலுக்கு அடியெடுத்து வைக்க உங்க செல்ல குட்டீஸ்களை, இன்று காலை 7:00 மணிக்குள், விழா அரங்கிற்கு அழைத்து வாருங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி