உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சொரப்பூர் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்

 சொரப்பூர் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்

நெட்டப்பாக்கம்: சொரப்பூர் லட்சுமிநாராயணப் பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நேற்று நடந்தது. நெட்டபாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆற்றுத் திருவிழா முன்னிட்டு பெருமாளுக்கு காலை 10.30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. அதனைத் தொடர்ந்து பெருமாளுக்கு தீர்த்தவாரி நீர் கொண்டு வரப்பட்டு அபிேஷகம், ஆராதனைகள் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ