உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசுக்கு எதிராக அவதுாறு பரப்புகிறார்; கவர்னர் மீது திருமாவளவன் குற்றச்சாட்டு

அரசுக்கு எதிராக அவதுாறு பரப்புகிறார்; கவர்னர் மீது திருமாவளவன் குற்றச்சாட்டு

வானுார் : 'தி.மு.க., அரசுக்கு எதிராக தமிழக கவர்னர் திட்டமிட்டு, மக்களிடையே அவதுாறுகளை பரப்பி வருகிறார்' என வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.வி.சி., கட்சி தென்கிழக்கு மாவட்ட முகாம் செயலாளர்கள் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டு தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது.மாநாட்டில் பங்கேற்ற வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:காஷ்மீரில் நடந்த பயங்கரவாத படுகொலை மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையும் அளிக்கிறது. இந்திய மக்களிடையே சகோதரத்துவத்தை பேணி பாதுகாக்காமல் இத்தகைய பயங்கரவாதத்தை நாம் எதிர்கொள்ள முடியாது. சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியலை பா.ஜ., விதைக்கிறது. காஷ்மீரில் நடந்த பயங்கரவாதம் இனி தொடராமல் இருக்க வேண்டுமானால் இந்தியர்கள் அனைவரும் ஜாதி, மதம் கடந்து சகோதரர்களாக ஒருங்கிணைய வேண்டும்.காஷ்மீர் படுகொலைக்கு, மத்திய பா.ஜ., அரசின் தவறான கொள்கை முடிவுகளும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததும் மிக முக்கியமான காரணங்களாகும்.தமிழகத்தில் இதுவரை எந்த கவர்னரும், செய்யாத குளறுபடிகளை தமிழக அரசு நிர்வாகத்திற்கு தற்போதைய கவர்னர் செய்து வருகிறார். அதன் விளைவாக தான் உதகையில் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டை, துணைவேந்தர்கள் தன்னிச்சையாக புறக்கணித்துள்ளனர். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு, கவர்னர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ