உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் பெயரில் போலி இணையதளம் துவக்கி மோசடி

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் பெயரில் போலி இணையதளம் துவக்கி மோசடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுச்சேரி: திறுநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் பெயரில் போலி இணையதளம் துவங்கி, அதில் கோடிக்கணக்கில் மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது.புதுச்சேரி மாநிலம் காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். சனிக்கிழமைகளில் அதிகளவில் பக்தர்கள் உள்ளனர். இக்கோவிலுக்கு என தனி இணையதளம் உள்ளது. அதில், ஆன்லைனில் புக்கிங் செய்யும் வசதியும் உள்ளது.இந்நிலையில், திருநள்ளாறு கோவிலின் அதிகாரப்பூர்வ இணையதளம் போல், போலியாக இணையதளம் துவங்கி அதில், தரிசனம், பூஜை விவரங்கள், அது தொடர்பான புகைப்படங்களை பதிவிட்டு பண மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த இணையதளத்தை நம்பிய பலர் சிறப்பு பூஜை, சாமி தரிசனம், அர்ச்சனை, அபிஷேகத்திற்கு என பணம் செலுத்தி உள்ளனர். வெளிநாட்டவர்களிடம் டாலர் கணக்கில் பணம் வசூலித்தனர். இந்த வகையில் கோடிக்கணக்கில் பணம் மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது.இது தொடர்பாக கோவில் நிர்வாகத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இந்த இணையதளத்தை உருவாக்கியது யார். பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

chennai sivakumar
பிப் 09, 2025 19:27

சனி பகவானுக்கு சனி பிடித்து விட்டாரா??


அப்பாவி
பிப் 09, 2025 15:17

பணம் வாங்கிட்டு யார் வேணும்னாலும் சனி பரிகாரம் பண்ணலாம் போலிருக்கு.


அம்பி ஐயர்
பிப் 09, 2025 10:53

எந்த அக்கவுண்டிற்குப் பணம் போனது.. அது யார் பெயரில் உள்ளது என்று விசாரித்தாலேயே உண்மை தெரிந்துவிடுமே.. 1 மணி நேரம் போதுமே யார் எனக் கண்டுபிடிக்க....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை