மேலும் செய்திகள்
அரசு மாணவியர் விடுதிகளில் பொங்கல் பண்டிகை போட்டி
13-Jan-2025
வில்லியனுார்: வில்லியனுாரில் திருப்பாவை பாசுரம் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.வில்லியனுார் வாஞ்சிநாதன் இளந்தொண்டர் மன்றம் மற்றும் வில்வம் பவுண்டேசன் இணைந்து, 8ம் ஆண்டு திருப்பாவை பாசுரம் ஒப்புவித்தல் போட்டியை, சங்கர் வித்யாலயா பள்ளியில் நடத்தியது. திரளான மாணவ மாணவியர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் 14 பேர் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு வில்லியனூர் தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் பரிசளிப்பு விழா நடந்தது. நிகழ்ச்சியில் வாஞ்சிநாதன் இளந்தொண்டர் மன்ற நிறுவனர் ராமன் வரவேற்றார். ரெட் கிராஸ் சொசைட்டி லஷ்மிபதி, சுதர்சனம் மற்றும் கோவில் நிர்வாக அதிகாரி சந்தானராமன் பரிசு வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியில் திருக்காமீஸ்வரர் கோவில் முன்னாள் நிர்வாக அதிகாரி திருவரசன், வாஞ்சிநாதன் இளந்தொண்டர் மன்ற முன்னாள் தலைவர் நாகராஜன், சரஸ்வதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ராமன், லஷ்மண், ஜெயபிரகாஷ், தசரதன், அழகப்பன், பரசுராமன் செய்தனர்.
13-Jan-2025