உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

புதுச்சேரி: பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.  லாஸ்பேட்டை, பகத்சிங் நகர் வாராஹி அம்மன் கோவில் அருகே நேற்று முன்தினம் அவ்வழியாக செல்லும் பொதுமக்களை வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி வருவதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலறிந்த உதவி சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அங்கு கத்தியுடன் பொதுமக்களை மிரட்டி கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர், கருவடிக்குப்பம், மேஜர் சரவணன் நகரை சேர்ந்த காமேஷ் மகன் விக்னேஷ், 24, என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ