மூவரிடம் ரூ.22,000 அபேஸ் மோசடி நபர்களுக்கு வலை
புதுச்சேரி: புதுச்சேரியில் மூன்று பேரிடம், 22 ஆயிரம் ரூபாய், மோசடி செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.வில்லியனுார் அடுத்த ஒதியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் அருண். இவரது வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து 10 ஆயிரம் ரூபாயை, அவருக்கு தெரியாமல் மர்ம நபர் எடுத்துள்ளனர். மேலும், உப்பளத்தை சேர்ந்த சரண்யா என்ப வரை தொடர்பு கொண்ட நபர், வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என கூறினர். அதை நம்பி, அவர் 6 ஆயிரம் ரூபாயை அனுப்பி, அந்த நபரிடம் ஏமாந்தார்.அதே போல, புதுச்சேரி மோகன் நகரை சேர்ந்தவர் ஜெயாவேணி, இவர் மர்ம நபருக்கு 6 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்துள்ளார். இதுகுறித்து, 3 பேர் கொடுத்து புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.