| ADDED : ஜன 18, 2024 03:46 AM
புதுச்சேரி: புதுச்சேரி திலாஸ்பேட்டை, வீம நகர், கருணா ஜோதி வீதியைச் சேர்ந்தவர் தமிழரசன்,24; பெயிண்டர். இவருக்கும் திலாஸ்பேட்டை வினோத்,19; என்பவருக்கும் முன்விரோதம் உள்ளது.நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து பைக்கில் புறப்பட்ட தமிழரசனை, வினோத் கூப்பிட்டார். தமிழரசன் பைக்கை நிறுத்தாமல் சென்றார்.வினோத், அவரது கூட்டாளிகள் திலாஸ்பேட்டை கார்த்திக், 19; ஆகாஷ், 19; விஜய், 19; ஆகியோர் ஒரே பைக்கில் விரட்டி சென்று தமிழரசனை மடக்கினர்.'கூப்பிட்டால் நிற்க மாட்டியா' எனக் கேட்டு, மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டு, கத்தியை வெளியே எடுத்து, இரவுக்குள் வெடிகுண்டு வீசி கொலை செய்வோம் என, மிரட்டினர்.தமிழரசன் அங்கிருந்து தப்பி சென்று, கோரிமேடு போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து வினோத், கார்த்திக், ஆகாஷ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களில் கார்த்திக் தவறி விழுந்ததில் வலது காலில் காயம் ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட மூவரையும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.