அரசு பள்ளியில் முப்பெரும் விழா
திருக்கனுார்: காட்டேரிக்குப்பம் இந்திரா காந்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் விளையாட்டு, அறிவியல் கண்காட்சி பரிசளிப்பு மற்றும் ஒரே பாரதம் உன்னத பாரதம் ஆகிய முப்பெரும் விழா நடந்தது. விழாவிற்கு, ஆசிரியர் கலைவாணி வரவேற்றார். தலைமை ஆசிரியர் அரிகோவிந்தன் தலைமை தாங்கி, விளையாட்டு மற்றும் அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். ஆங்கில ஆசிரியர் கலைவாணி தொகுத்து வழங்கினார். முன்னதாக, மாணவிகளின் கலை மற்றும் சிலம்பம் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் பாலசங்கர், ஆசிரியர்கள் உதயபானு, கீதாஞ்சலி, மெர்லின் போர்க்கியா ஆகியோ ர் செய்தனர். மூத்த ஆசிரியர் ருக்மணி நன்றி கூறினார். இதில், ஆசிரியர்கள் விஜயலட்சுமி, சுகுணா, வெங்கடேசன் மற்றும் அலுவலக ஊழியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.