மேலும் செய்திகள்
ஆண்டு விழா
26-Feb-2026
திருக்கனுார்: வாதானுார் அன்னை சாரதா தேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் முகாம், கற்றல் திருவிழா, மக்கள் தொகை விழிப்புணர்வு கருத்தரங்கம் ஆகிய முப்பெரும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் வீரய்யன் தலைமை தாங்கினார். ஆசிரியர் பாலகுமார் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் சங்க கவுரவ தலைவர் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தார். திருபுவனை தனியார் கம்பெனி மேலாளர் கோபாலகிருஷ்ணன், மாணவர்களின் பெற்றோர்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். சுற்றுச்சூழல் கழகம் சார்பில் பங்கேற்ற அனைவருக்கும் தேக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை போன்ற மரக்கன்றுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யும் பொருட்டு துணி கைப்பை வழங்கப்பட்டது. ஆசிரியர் ரேணு நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செந்தமிழ்ச்செல்வி, வேலவன், சபரிநாதன், ப்ளோரன்சியா, நித்தில வள்ளி, ஸ்ரீமதி, விஸ்வ பிரியா, சுகந்தி, ஓம் சாந்தி, சுஜாதா, மகேஸ்வரி, சுமதி, நிஷாந்தி ஆகியோர் செய்திருந்தனர்.
26-Feb-2026