உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரகளை செய்த மூவர் கைது

ரகளை செய்த மூவர் கைது

புதுச்சேரி: காலாப்பட்டு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை பெரியகாலாப்பட்டு பகுதியில் ரோந்து சென்றனர். பிம்ஸ் சாலை திறந்த வெளி மைதானம் அருகே பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொண்ட மரக்காணம் ஜெயபால்,49 என்பவரை கைது செய்தனர். அதே போல், வில்லியனுார் சிறப்பு உதவி சப் இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் தலைமையிலான போலீசார் நேற்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட முருங்கப்பாக்கம் ராஜசேகர்,36; உளுந்துார்பேட்டை சுரேஷ்,42; ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ