உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / துாய்மையே சேவை இருவார நலப்பணி நிறைவு விழா; கவர்னர், முதல்வர் பங்கேற்பு

துாய்மையே சேவை இருவார நலப்பணி நிறைவு விழா; கவர்னர், முதல்வர் பங்கேற்பு

புதுச்சேரி : உள்ளாட்சி துறை மற்றும் நகராட்சிகள் சார்பில், துாய்மையே சேவை இருவார நலப்பணி கடந்த 17 ம் தேதி துவங்கி நேற்று வரை, துாய்மை பணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது. இதன் நிறைவு விழா கம்பன் கலையரங்கில் நேற்று நடந்தது. விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு, துாய்மை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி, ராஷ்டிரிய ரக்ஷா பல்கலைக்கழக மாணவர்களின் விழிப்புணர்வு ஓட்டம், உழவர்சந்தை துாய்மைப்பணிகளை துவக்கி வைத்தனர். இதனை தொடர்ந்து, 'தாயின் பெயரில் ஒரு மரம்' உறுதி மொழியை கவர்னர் கைலாஷ்நாதன் வாசிக்க, விழாவில் பங்கேற்ற அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.துாய்மையே சேவை இருவார நலப்பணியில் ஈடுபட்ட துாய்மை பணியாளர்கள், சுய உதவிக்குழுவினர், என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர், திருநங்கைகளுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, பாஸ்கர், சம்பத், பிரகாஷ்குமார், ரிச்சர்ட், தலைமை செயலர் சரத் சவுக்கான், அரசு செயலர்கள் ஜவகர், சேகவன், சுற்றுச்சூழல் துறை உறுப்பினர் செயலர் ரமேஷ், உள்ளாட்சித் துறை இயக்குநர் சக்திவேல், புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ