உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தியாகராஜ சுவாமி ஜெயந்தி விழா

 தியாகராஜ சுவாமி ஜெயந்தி விழா

புதுச்சேரி: சிருங்கேரி சிவகங்கா மடம் சாரதம்பாள் கோவிலில், தியாகராஜ சுவாமிகள் ஜெயந்தி விழா (23ம் தேதி) துவங்குகிறது. எல்லைப்பிள்ளைச்சாவடி சிருங்கேரி, சிவகங்கா மடம் சாரதம்பாள் கோவிலில் தியாகராஜ சுவாமிகள் 51ம் ஆண்டு ஜெயந்தி விழா, இன்று (23ம் தேதி) விநாயகர் பூஜையுடன் துவங்குகிறது. தொடர்ந்து தியாகராஜர் ஆவாஹன பூஜை நடக்கிறது. மாலை 4:30 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாமம் நடக்கிறது. நாளை (24ம் தேதி) மாலை 5:00 மணிக்கு சுவாமிகளின் ஜனன உற்சவம், 6:00 மணிக்கு பஞ்சரத்ன கீர்த்தனைகள் நடக்கிறது. 25ம் தேதி காலை 8:30 மணிக்கு கிருஷ்ண மிரேமிக பஜனை மண்டலியின் தோடய மங்களம் மற்றும் உஞ்சவ்ருத்தி பஜனை நடக்கிறது. 26ம் தேதி, காலை 8:00 மணிக்கு தியாகராஜர் குழுவினர் இசை அமுதம் தொடர்ந்து, 12:30 மணிக்கு திவ்யபிரசாதம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை