எம்.பி.பி.எஸ்., சிறப்பு கவுன்சிலிங் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
புதுச்சேரி: எம்.பி.பி.எஸ்., ஆயுர்வேத சிறப்பு கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்க இன்று வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்டாக் என்.ஆர்.ஐ., சீட் விவகாரத்தில் ஒரு மாணவரின் சேர்க்கை ரத்து செய்யப்பட்டது. இத்துடன் ஆயுர்வேத படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் 3 சீட்டுகளும், சுய நிதி இடங்களில் 7 சீட்டுகளும் காலியாக உள்ளன. இந்த சீட்டுகளுக்கு நேற்று வரை விண்ணப்பிக்க இறுதி கெடு விதிக்கப்பட்டு இருந்தது. இந்த காலக்கெடுவை இன்று 3ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டித்து சென்டாக் உத்தரவிட்டுள்ளது.கட் ஆப் குறைப்புஆயுர்வேத படிப்பிற்கு விண்ணப்பிக்க பொது, பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு கட் ஆப் மதிப்பெண் 162யை 112 ஆக குறைத்து மத்திய ஆயுஷ் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல் பொது மாற்றுதிறனாளிகளுக்கான கட் ஆப் மதிப்பெண் 144ல் இருந்து 99 ஆகவும், எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கான கட் ஆப் மதிப்பெண் 127யை 87 ஆக குறைக்கப்பட்டுள்ளது.