நாளை வள்ளலார் பிறந்த நாள் விழா
புதுச்சேரி: முதலியார்பேட்டை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில், வள்ளலாரின் 204வது பிறந்த நாள் பெரு நாள் விழா நாளை (11ம் தேதி) நட்சத்திரத்தின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது. மேலும், ராமலிங்க சுவாமி கோவில் மடத்தின் 78ம் ஆண்டு துவக்க விழா நடக்கிறது. துவக்க நிகழ்ச்சியாக நாளை காலை 6:00 மணிக்கு அகவல் உணர்தோதுதல் நடக்கிறது. 8:00 மணிக்கு சத்திய ஞானக்கொடி ஏற்றப்படுகிறது. 8:45 மணி முதல் திருவருட்பா கருத்தரங்கம் நடக்கிறது. மடத்தின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் வரவேற்கிறார். கடலுார் மாவட்ட தமிழ் சங்க தலைவர் குழந்தைவேலன் தலைமை தாங்குகிறார். மடத்தின் செயலாளர் சேரன் நோக்க உரையாற்றுகிறார். முதல்வர் ரங்கசாமி, தற்காலிக சபாநாயகர் அன்பழகன், ஜான்குமார் எம்.எல்.ஏ., என்.ஆர்.காங்., பொதுச் செயலாளர் ஜெயபால், பா.ம.க., மாநில அமைப்பாளர் மதியழகன், மாநில நிர்வாக குழு தலைவர் கணபதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர். ஒருங்கிணைந்த சன்மார்க்க சங்க மாநில தலைவர் கணேசன், வேல்முருகன், சண்முகசுந்தரம், ஜெயபதி, சீத்தாலட்சுமி, ஜெயந்தி ராஜவேலு, கோதண்டபாணி ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவாற்றுகின்றனர். சஜிதா கோபாலகிருஷ்ணன் நன்றி கூறுகிறார்.