உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புயல் எச்சரிக்கை காரணமாக சுற்றுலா தலங்கள் மூடல்

புயல் எச்சரிக்கை காரணமாக சுற்றுலா தலங்கள் மூடல்

புதுச்சேரி: புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு, கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி வருகிறது. இதன் காரணமாக, புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. புயல் காரணமாக கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுவதால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்லாத வகையில் போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளனர்.இதேபோல், பாண்டி மெரினா கடற்கரைக்கு செல்லும் பாதைகளிலும் தடுப்புகள் ஏற்படுத்தி, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, நேற்று காலை கடற்கரையில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டதால், வேறு வழியின்றி போலீசார் கடற்கரை சாலைக்கு மட்டும் செல்ல அனுமதி அளித்தனர்.ஆனால், கற்குவியல் மற்றும் மணல் பரப்பிற்கு யாரும் செல்ல வகையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். புயல் எச்சரிக்கை கார ணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து, நோணாங்குப்பம் படகு குழாம், கடற்கரை சாலை, பாரதி பூங்கா, பாண்டி மெரினா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி