மேலும் செய்திகள்
நோணாங்குப்பத்தில் படகு சவாரி துவக்கம்
16-Dec-2024
அரியாங்குப்பம் : புயல், மழை வெள்ளத்தில் சேதமடைந்த பேரடைஸ் பீச்சில் தால், 20 நாட்களுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.வீடுர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதால் கடந்த 2ம் தேதி, நோணாங்குப்பம் ஆற்றில், வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. படகு குழாமில் நிறுத்தி வைத்திருந்த 5 படகுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன.பாரடைஸ் பீச்சில் இருந்த ஜெட்டி, குடில்கள், கீற்று குடைகள் அடித்து செல்லப்பட்டன. வெளியில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள், பேரடைஸ் பீச்சிற்கு செல்ல முடியாமல், திரும்பி சென்றனர். சுற்றுலாப் பயணிகளுக்காக, படகு குழாமில் இருந்து படகு சவாரி மட்டும் இயக்கப்பட்டது.இந்நிலையில், ஜெட்டி உள்ளிட்ட இடங்கள் சீரமைக்கப்பட்டது. அதனை அடுத்து, 20 நாட்களுக்கு பின், நேற்று முதல் பாரடைஸ் பீச்சில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். சுற்றுலாப் பயணிகள் படகு மூலம், பீச்சிற்கு சென்று சுற்றி பார்த்தனர்.
16-Dec-2024