ஆரோவில்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வானுார்: ஆரோவில்லில் விடுமுறை காரணமாக 2 நாட்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.விழுப்புரம் மாவட்டம், சர்வதேச நகரமான ஆரோவில்லில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 3,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அமைதி பூங்காவாக உருவாக்கப்பட்ட ஆரோவில்லில் மாத்திரி மந்திர் தியான மையத்தை பார்வையிட தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.நேற்று முன்தினம் சனி, நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களில் புதுச்சேரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஆரோவில் பகுதிக்கு படையெடுத்தனர்.மாத்திரி மந்திரை 'வியூ பாயிண்ட்' பகுதியில் இருந்து பார்வையிட்டதுடன், செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.கடந்த இரு தினங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை புரிந்ததாக ஆரோவில் நிர்வாகம் தரப்பில் தெரவிக்கப்பட்டுள்ளது.