உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பாரம்பரிய நெல் வகை உற்பத்தி பயிற்சி முகாம்

 பாரம்பரிய நெல் வகை உற்பத்தி பயிற்சி முகாம்

வில்லியனுார்: புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் பாரம்பரிய நெல் உற்பத்தி மற்றும் மேம்படுத்துவது குறித்த பயிற்சி முகாம் நடந்தது. வில்லியனுார் உழவர் உதவியகம் ஆத்மா திட்டத்தின் கீழ் பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில், பாரம்பரிய நெல் வகைகளின் உற்பத்தி மற்றும் திறனை மேம்படுத்துவது குறித்த பயிற்சி முகாம் உறுவையாறு சாய்பாபா கோவிலில் நடந்தது. முகாமிற்கு துணை வேளாண் இயக்குனர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். வில்லியனுார் வேளாண் அலுவலர் உமாராணி வரவேற்றார். திருக்காஞ்சி வேளாண் அலுவலர் தினகரன் நோக்க உரையாற்றினார். அரியூர் வேளாண் அலுவலர் சத்யன் வாழ்த்துரை வழங்கினார். பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரவி, பாரம்பரிய நெற்பயிருக்கான உழவியல் தொழில் நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்தார். காரைக்கால் பஜன்கோ பூச்சியியல் துறை பேராசிரியர் காண்டீபன், பாரம்பரிய நெற்பயிருக்கான பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு குறித்து எடுத்துரைத்தார். முகாமில் விவசாயிகளுக்கும் பாரம்பரிய நெல் வகைகள் மற்றும் அதன் சாகுபடி குறிப்புகள் குறித்த கையேடு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. வில்லியனுார், அரியூர் மற்றும் திருக்காஞ்சி பகுதியை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். ஆத்மா திட்ட மேலாளர் ரமேஷ் நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளை வில்லியனூர் உழவர் உதவியக உதவி வேளாண் அலுவலர் தமிழ்ச்செல்வன் மற்றும் களப்பணியாளர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை