உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போக்குவரத்து நெரிசல் கையெழுத்து இயக்கம்

போக்குவரத்து நெரிசல் கையெழுத்து இயக்கம்

திருபுவனை,: மதகடிப்பட்டு நான்குமுனை சந்திப்பில் போக்குரவத்து நெரிசலை கட்டுப்படுத்த வலியறுத்தி இந்திய கம்யூ., சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் மதகடிப்பட்டு நான்கு முனை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தினசரி அவதியடைகின்றனர்.இந்நிலையில் மதகடிப்பட்டில் போக்குரவத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி, புதுச்சேரி முதல்வர், போக்குவரத்து துறை அமைச்சர், மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் இந்திய கம்யூ., சார்பில் மனு அளிக்கப்பட உள்ளது.இதையடுத்து, இந்திய கம்யூ., திருபுவனை தொகுதி செயலாளர் ரவி தலைமையில் கடை வீதியில் கையெழுத்து இயக்கம் நடந்தது. நிகழ்ச்சியில் தொகுதி கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி