| ADDED : அக் 14, 2024 08:41 AM
புதுச்சேரி : புதுச்சேரி அண்ணா சாலையில் நேற்றிரவு ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வாகனங்களால், நகரத்தின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவது வழக்கமாக உள்ளது.தற்போது தீபாவளி, பண்டிகை நெருங்கி வருவதால், சுற்றுலா பயணிகள் மற்றும் கடை வீதிகளுக்கு வந்து செல்லும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. புதுச்சேரியின் பிரதான சாலைகளில் ஒன்றான அண்ணா சாலையின் ராஜா தியேட்டர் சந்திப்பு முதல் புஸ்ஸி தெரு சந்திப்பு வரை சாலையோர ஆக்கிரமிப்புகள் மற்றும் வாகனங்கள் நிறுத்தம் காரணமாக நேற்றிரவு திடீரென கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், கார், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் பல மணி நேரம் சாலையில் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.எனவே, பண்டிகை காலங்களில் நகரத்தின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.