உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரயில் மறியல்: 67 பேர் கைது

ரயில் மறியல்: 67 பேர் கைது

வில்லியனுார்: வில்லியனுாரில் ரயில் மறியலில் ஈடுபட்ட வி.சி., கட்சியினர் 67 பேரை போலீசார் கைது செய்தனர்.அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசியதாக கூறி, மத்திய அமைச்சர் அமீத்ஷாவை கண்டித்தும் வி.சி., கட்சியினர் வில்லியனுாரில் ரயில் மறியலில் ஈடுபட்டனர். வில்லியனுார் தொகுதி செயலாளர் தமிழ்வளவன் தலைமை 200க்கும் மேற்பட்டோர் வில்லியனுார் ரயில் நிலையத்தில் நேற்று காலை 10:15 மணியளவில் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு வந்த பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட வி.சி., கட்சியினர் 67 பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ